Dr. Chinniah Sivalingam

Date of Birth: 05 December 1932 - Deceased: 30 November 2024
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை- சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம், (கல்லடி மணியம்)-அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
சுபேந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
வளர்மதியின் அன்பு மாமனாரும்,
சுமித்தா, கோகுல், ஜனுஷா, பிரியந்தன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், வள்ளியம்மை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராசனாயகம், ராஜரட்ணம் மற்றும் புஷ்பராணி, காலஞ்சென்ற யோகமணி மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
