திரு. கிறிஸ்தோ அகுஸ்தீன் (சின்னமணி)
மறைவு: 10 மார்ச் 2025
யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்தோ அகுஸ்தீன் 10-03-2025 திங்கட்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
யூடிற்றா (நோர்வே), யூலியானா (இலண்டன்), யுதாசன் (கனடா), யூஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராஜன், தவராஜன், தேவராஜன், ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற துரைராசா, ராசமணி, ருக்குமணி, கமலா, அருளம்மா, செல்வராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெரோன், ஜெறிக்சன், யோனாஸ், மிறோன், மிறோனா, விறோனா, நியோமி, செருபா, எரிக்சன், ஸ்ரெபான், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 03.30 மணியளவில் நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி இடம்பெற்று, புகழுடல் சென்பீற்றஸ் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
