Mrs. Daise Premakumary Pushparajaha
(ஓய்வு பெற்ற ஆசிரியை)
Date of Birth: 30 June 1954 - Deceased: 23 November 2024
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்." (யோவான் 11:25)
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டெய்சி பிரேமகுமாரி புஷ்பராஜா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானச்செல்வம்-பூமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பிசல் புஷ்பராஜா-கெற்றி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சாமுவேல் சந்திரன் புபுஷ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிறைன் நிரோஷன், நொயலின் ரொஷானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுஹேமனின் அன்பு மாமியாரும்,
பிரேமறஞ்சனி சோமநாதர், காலஞ்சென்ற கிறிஸ்டி பிரேமகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரோகிணி தாமோதரம், ரோஹான் புஷ்பராஜா, மோகன் புஷ்பராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 25-11-2024 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் நடபெறும் நல்லடக்க ஆராதனையின் பின்னர் வெள்ளவத்தை மெதடிஸ்த திருச்சபையின் கல்லறை தோட்டத்தில் (Peterson Lane Cemetery) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
