Mr. Danial Gunaratnam Thambirajaha
(தேசப்பட தயாரிப்பு அதிகாரி (MPO) நில அளவை திணைக்களம்)
Date of Birth: 29 January 1935 - Deceased: 30 May 2024
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. டானியல் குணரத்தினம் தம்பிராஜா அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டானியல் ஜோன் தம்பிராஜா - லிடியா அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான D.V. இராசையா தம்பதியினரின் மருமகனும்,
இரஞ்சிதமணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு. D.T. இராஜரட்ணம் (அவுஸ்திரேலியா), திரு. T. துரைராஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற ரஞ்சினி, இன்பமலர் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
ஜோய்ஸ் சுகந்தினி (அவுஸ்திரேலியா), Dr. ஐரீன் பிறேமினி (தேசிய வைத்தியசாலை - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. M.G. ஜெயரூபன் (University of New England - Australia), Dr.S. சத்தியசீலன் (போதனா வைத்தியசாலை - களுபோவில) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. அன்ரு சுஜீவன் (அவுஸ்திரேலியா), Dr. கிறிஸ்டினா நில்மினி (அவுஸ்திரேலியா), அஷாந்த், அஷ்விந்த், Dr. மெலானி (அவுஸ்திரேலியா), Dr. தனன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பேரனும்,
திரிஷாவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 01-06-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல்2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
