திருமதி டாக்டர் விக்கினேஸ்வரி இராமசந்திரன்
(டாக்டர்)
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1936 - மறைவு: 03 அக்டோபர் 2019
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, இராஜ்குமார், ராஜி, தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பகிரதன், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரன், பிரியங்கா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
www.tamilthakaval.org
