திரு. தெய்வராணி சற்குருநாதன் (செல்வி டீச்சர்)
(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் (கனிஷ்ட பிரிவு) ஆசிரியை - மட். கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம்)
தோற்றம்: 09 மார்ச் 1951 - மறைவு: 05 ஜூலை 2026
யாழ். நவண்டிலைப் பிறப்பிடமாகவும், இல- 9/1, அதிகார் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வராணி சற்குருநாதன் அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம் - நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நித்திலா (உதவி முகாமையாளர் - Brandix) அவர்களின் பாசமிகு தாயாரும்,
முகுந்தன் (பிராந்திய முகாமையாளர் - Biomex) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விக்னேஷ்வரி, தெய்வநாயகி, சரவணராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜோசப், காலஞ்சென்ற தில்லைநாதன், திலகா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஷ்விந், அர்விந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
