திருமதி. தேவகல்யாணி (பேபி) சபாநாதன்

தேவகல்யாணி (பேபி) சபாநாதன்

மறைவு: 01 ஜூலை 2026

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிஸ்சையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தேவகல்யாணி சபாநாதன் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான SRS செல்லத்துரை (பிரபல புடவை வர்த்தகர்) - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வியும், ஓய்வுபெற்ற காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - விஜயலட்சுமி தம்பதியினரின்  அன்பு மருமகளும், 

சபாநாதன் (PHI) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாகரன் (அவுஸ்திரேலியா), நந்தகுமாரன் (கொழும்பு ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதாஞ்சலி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பிரணவாக்‌ஷரன், மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன் (முன்னைநாள் அதிபர் - காரைநகர் இந்துக் கல்லூரி), தேவராணி, தேவபாலன் மற்றும் தேவரத்தினம், தேவரோகிணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சபாநாதன் (கணவர்):- +94 77 629 0486
கருணாகரன் (மகன்):- +94 75 740 0413
நந்தகுமாரன் (மகன்):- +94 77 609 6208

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/07/2026 00:00)