Capt. Devasakajam Ponjin Ratnaraj

(வணிக கடற்படை)

Devasakajam Ponjin Ratnaraj

Date of Birth: 04 July 1948 - Deceased: 28 February 2026

கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ் ஊர்காவற்துறை - கிழக்கை தாயகமாகவும் பின்னர் அமெரிக்கா மின்னசோட்டாவை (Minnesota) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தேவசகாயம் பொன்ஜின் ரட்னராஜ் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குரூஸ்முத்து சூசை தேவசகாயம் - முத்தாச்சி சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கேப்டன் இமானுவேல் அந்தோனிசாமி - ஹில்டா அந்தோனிசாமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குயின் பவானி அவர்களின் பெறாமகனும்,

சந்திரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,

மரியோ, டிலானோ, ரொட்னி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அர்ச்சனா, கேஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஏவா அவர்களின் பாசமிகு பேரனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்  12-02-2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை Kozlak- Radulovich Maple Grove Chapel, MN இல் நடைபெற்று, 13-03-2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் Church of St. Vincent de Paul- Brooklyn Park, MN இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

8934, ஜின்னியா லேன் N, மேப்பிள் க்ரோவ், MN 55369

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)