திருமதி. தனலக்ஷ்மி இராஜரட்ணம்

தனலக்ஷ்மி இராஜரட்ணம்

தோற்றம்: 30 நவம்பர் 1938 - மறைவு: 18 டிசம்பர் 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், Toronto Canada ஆகிய இடங்களை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. தனலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன், பாபு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதிவதனி, கிறிஸ்ரினா, தனராணி, செல்வி ஆகியோரின் பிரியமுள்ள மாமியும்,

ஆத்மன், ஆத்மிகா, ஹடாஷா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி, ராசாத்தி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-12-2025 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் நடைபெற்று, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)