Mrs. Dharmarajeshwaran Nagarajeshwary

Dharmarajeshwaran Nagarajeshwary

Date of Birth: 04 April 1945 - Deceased: 04 August 2026

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்மராஜேஸ்வரன் நாகராஜேஸ்வரி அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி (ஓய்வுபெற்ற அதிபர்) - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்) - கண்மலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மராஜேஸ்வரன் (ஓய்வுநிலை மக்கள் வங்கி உதவி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தார்மீகனின் (மென்பொறியியலாளர்) பாசமிகு தாயாரும்,

நிசாந்தினியின் பாசமிகு மாமியாரும்,

சுபநிதா, பிரநிதா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற இராரராஜேஸ்வரி, இராஜராஜேஸ்வரன் (ஓய்வு நிலை மிருக வைத்தியர்), நாகராஜேஸ்வரன் (ஓய்வுநிலை பொறியியலாளர்), தியாகராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரன் (ஓய்வுநிலை முகாமையாளர்), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி ஓய்வுநிலை ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன் (ஓய்வுபெற்ற சட்டத்தரணி), கனகராஜேஸ்வரன் (ஓய்வுபெற்ற மருந்தாளர்), ஜெகதீஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியர்), ஜதீந்திரேஸ்வரன், விமலேஸ்வரி மற்றும் மகேஸ்வரன் (மாரி அம்மன் மோட்டோர்ஸ்), குலராஜேஸ்வரி, தயாளநடேஸ்வரன், ஜெயமங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-08-2026 புதன்கிழமை 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 071 6857
+94 21 222 0014

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2026 00:00)