திருமதி. தர்மசுந்தரம் புவனேஸ்வரி
மறைவு: 13 டிசம்பர் 2025
யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், உழுத்தாம்பி வீதி காவற்கோட்டை கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் - கமலசுந்தரம் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற ஹரிதாஸ், வாணி, கர்ணன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
கவிதா நிர்மலகுமார் சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கதிர்காமலிங்கம் காலஞ்சென்றவர்களான பிரேமாவதி, லீலாவதி மற்றும் குகதாஸ், இந்திராகாந்தி, பத்மாவதி, காலஞ்சென்ற மோகனதாஸ் சிறீதரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கணேசரத்தினம், சத்தியசீலன், ராதாலட்சுமி, காலஞ்சென்ற ரஞ்சினதாஸ், பிறேம்தாஸ், ஜெகதீஸ்வரி, குணசுந்தரம், காலஞ்சென்ற ஞானசுந்தரம், பாஸ்சுந்தரம், குணவதி, புனிதவதி, கமலாவதி, ஞானவதி ஆகியோரின் மைத்துனியும்,
நிரோஜன், தனுரா ஆகியோரின் அம்மம்மாவும்,
கானுஜா, கிருசாஜினி, தர்சா, வினோகரன், சுதாகரன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
