திரு. டிலக்சன் ஜேக்கப் நெவில்
தோற்றம்: 11 அக்டோபர் 2004 - மறைவு: 02 ஜனவரி 2025
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. டிலக்சன் ஜேக்கப் நெவில் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், பத்திநாதன் - காலஞ்சென்ற செபஸ்டியம்மாள் தம்பதியினரின், காலஞ்சென்ற கந்தசாமி - சாந்தினி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,
ஜேக்கப் நெவில் - கயூரதி தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜேக்சி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
