திருமதி. தெய்வநாயகி இராதகிருஷ்ணன்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, கொழு. கொட்டாஞ்சேனை சென் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 02 டிசம்பர் 1949 - மறைவு: 08 ஜனவரி 2026
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வநாயகி இராதாகிருஷ்ணன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி - நாகரட்ணவதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுந்தரமூர்த்தி இராதாகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற Quantity Surveyor) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷனின் (Accountant- Development Interplan Ceylon (Pvt) Ltd) பாசமிக்க தாயாரும்,
தாரணியின் (Senior Technical Consultant - Rizing Lanka (Pvt) Ltd) அன்பு மாமியாரும்,
யதுமிதாவின் பேத்தியும்,
லோகநாதன் (கனடா), சந்திரலேகா, குமுதினி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2026 சனிக்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
