திரு துரைஐயா மகாலிங்கம்

(Mini Tons, Mini Theater, Mini Centre, Maha Mini Sounds, Maha Mini Recording Studio, Maha Mini Multi Centre, TMM Audio - ஸ்தாபகர்)

துரைஐயா மகாலிங்கம்

தோற்றம்: 17 ஏப்ரல் 1948 - மறைவு: 25 ஜனவரி 2024

யாழ். கொக்குவில் பூநாறி மரத்தடியைப்  பிறப்பிடமாகவும், 958/47, கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைஐயா மகாலிங்கம் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

காலஞ்சென்றவர்களான துரைஐயா - சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி (குயிலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிலா, தேவானந், பவானந், சோபானந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பவனம், விஜயரட்ணம், தையல்நாயகி, சரோஜினிதேவி மற்றும் பாலரஞ்சித், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, சிவுசுப்பிரமணியம், லிங்காதேவி, ராஜா மற்றும் தயானந்தன் சன்றா, லிங்கேஸ்வரி, ராதாமேத்தா, பரந்தாமன், பவானி, பக்தவற்சலன், அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேமகாந், காயத்திரி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியானத், சூரியானந், வெண்பா, மெலினா, சோமித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலை 10.00  மணிக்கு ஆரம்பமாகி பூதவுடல் நண்பகல் 12.00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)