திரு. எட்மண்ட் யூட் யூட்மெரின் (யூட்)

(செந்தமிழ் கழக முன்னணி விளையாட்டு வீரர், வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட நடுவர், DR Sports- உரிமையாளர்)

எட்மண்ட் யூட் யூட்மெரின் (யூட்)

தோற்றம்: 16 ஜனவரி 1998 - மறைவு: 13 அக்டோபர் 2025

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எட்மண்ட் யூட் யூட்மெரின் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், எட்மண்ட் யூட் - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், 

பிலிப்பையா - மல்லிகாராணி தம்பதியினர், காலஞ்சென்ற திருச்செல்வம் - மணிமேகலை தம்பதியினரின் பாசமிக்க பேரனும்,

யூட் அனிஸ், காலஞ்சென்ற யூட் நிதர்சன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும்,

நெல்சன், நிக்சன், பவா, ரவிசந்திரன், ஜெயசேகர், காலஞ்சென்ற வளர்மதி, பாமதி, சாந்தா, அனு, சுதா, அசினா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

செல்வன், காலஞ்சென்ற ரங்கன், திரிஸ்வரன், கமல், உதயன், சர்மிலா, பேபி, காலஞ்சென்ற சோபா, பீபி, வதனி, பிரமிளா ஆகியோரின் அன்பு மருமகனும்,

மதீஸ், நிஷா, இனோஸ், இலக்கியா, அன்ரோஸ், நிதர்சன், நிதர்சினி, ரூபன், ரூபினி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,

நிசாந்தன், திரிசியன், திவான், திஷான், சுலக்ஷனா, பூஜா, திஷானி, திவானி, திருநிலா, திரிஷா, புகழ், திரிஷியா ஆகியோரின் மைத்துனரும ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் உடுத்துறை செந்தமிழ் கழக விளையாட்டு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தாழையடி புனித அந்தோனியார் ஆலயத்தில்  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

✝️✝️✝️

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 00:00)