Mrs. Edwin Rasa Reginamma

Edwin Rasa Reginamma

Date of Birth: 24 December 1946 - Deceased: 09 December 2024

யாழ். கீரிமலை வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எட்வின்ராசா றெஜினம்மா அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுறுப்பிள்ளை - பூரணம் தம்பதியினரின் மகளும்,

சூசைப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற எட்வின் ராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருளப்பு மலர் யோகம் (கனடா), காலஞ்சென்ற தவம், யோசேப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டொன்பொஸ்கோ பாலன் (இத்தாலி), குலேந்திரன் குட்டி (இலண்டன்), றோய்ஜஸ்ரலா (கனடா), டொளஸ் சர்மிளா (அதிபர் - மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம்), காலஞ்சென்ற யூஜின் இரட்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றோய்பிராங்கிலின் (மாதகல்), அன்ரன் யூட்டொளஸ் (சிரேஷ்ட தொழில் அதிகாரி - தொழில் திணைக்களம், முல்லைத்தீவு), மாலா (இத்தாலி), விஜிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றெனுஜனா (மாதகல்), ஜெபர்ஷனா (மாதகல்), யூஜின் (இத்தாலி), ஆதி (இத்தாலி), இளமாறன் (இலண்டன்), சங்கீதன் (இலண்டன்), திவ்வியா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்கள் 11-12-2024 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர், புகழுடல் வலித்தூண்டலிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட, பிற்பகல் 2.00 மணியளவில் வலித்தூண்டல் புனித அன்னமாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, வலித்தூண்டல் புனித அன்னம்மாள் செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2024 05:00)