திரு. ஈஸ்வரலிங்கம் சின்னத்துரை
தோற்றம்: 04 பெப்ரவரி 1962 - மறைவு: 13 மார்ச் 2025
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஈஸ்வரலிங்கம் சின்னத்துரை அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரலிங்கம் - குணவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வெங்கடேச ராவ் - ராஜலஷ்மி (இந்தியா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கஸ்தூரி (இந்தியா) அவர்களின் அன்புக்கணவரும்,
சிந்து (லக்சம்பேக்), சிறீஜா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ், ஆனந்தகுமார் (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணலெட்சுமி (கனடா), துரைலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்ற சந்திரவதனா, இந்திரவதனா (இலங்கை), கிருஸ்ணலிங்கம் (இலண்டன்), இரத்தினலிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற குமரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அதர்வா, விசாகன் (இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
