Mrs. Eeswary Mahendran
Date of Birth: 17 October 1938 - Deceased: 18 March 2025
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஈஸ்வரி மகேந்திரன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை - பூரணம் தம்பதியினரின் ஏக புத்திரியும்,
சிற்றம்பலம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயரூபினி (உமா), ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீரன், அஞ்சனா, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 - 8.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
