திரு. ஏகாம்பரம் மகேந்திரன்
தோற்றம்: 30 ஜூன் 1960 - மறைவு: 03 பெப்ரவரி 2025
மட்டக்களப்பு - ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் மகேந்திரன் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவனின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவராசா, சிவயோகம், ஜெந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சுவர்ண வரதராஜ, ரஜ்ஜித் சிவசுப்பிரமணியம், கௌரி சபேஷன், றோகன் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-02-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 11:30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
