திரு. இளையதம்பி மகாலிங்கம் (செட்டியார்)

இளையதம்பி மகாலிங்கம் (செட்டியார்)

தோற்றம்: 01 ஜூன் 1949 - மறைவு: 08 மார்ச் 2026

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இளையதம்பி மகாலிங்கம் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - ஆச்சிமுத்து தம்பதியினரின் மகனும், நாகநாதர் - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,

கோமதி (அமெரிக்கா), காலஞ்சென்ற சிறீகாந்தன், மலர்விழி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறீதரன் (அமெரிக்கா), ஜெனிதா. பாலகிருஸ்னன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

சர்யோனா (அமெரிக்கா), சாத்விகா (அமெரிக்கா), சிவானுயா (அமெரிக்கா), தனோயா, தர்சிகா, தரனிகன் (கனடா), பவித்திரன் (கனடா), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், காசிப்பிள்ளை, தம்பாபிள்ளை மற்றும் திருவிளங்கம், சரஸ்வதி, யோகாம்பிகை ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)