Mr. Elayathambi Thirunavugarasu
(ஓய்வு பெற்ற தபாலதிபர், சுன்னாகம்)
Date of Birth: 25 July 1938 - Deceased: 26 March 2026
யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி திருநாவுக்கரசு அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-இலட்சுமிப் பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற மங்களநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழினி (யாழ் மாவட்ட செயலகம்), பிரதீபன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையாரும்,
நந்தகுமார் (ஆசிரியர் - யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி), ஜெயதர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தெய்வநாயகி, காலஞ்சென்ற இராசநாயகி, செல்வநாயகி (இலண்டன்), ஜெயந்தன் (கனடா), வாகீசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷிபவன்(Student - University of Sri Jayewardenepura), அகிலேஸ் (Student- Imperial College London), கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
