Mrs. Elayathamby Ankaytkanmani
(Retired Teacher - Puttur Somaskanda College)
Date of Birth: 03 May 1930 - Deceased: 19 August 2025
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது டென்மார்க்கில் வாழ்ந்தவருமான திருமதி. இளையதம்பி அங்கயற்கண்மணி அவர்கள் 19-08-2025 செவ்வாய்கிழமை டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா இளையதம்பி (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்வர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்வர்களான பொன்னையா அபிராமிப்பிள்ளை(வெள்ளைப் பேத்தி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
மோகன், நந்தன், வதனா, யமுனா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, பூங்கோதை, தாமரைச்செல்வன். ஸ்ரீகந்தவேல், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா, கோகுலன், தேனுகா, குமணன், யோகன், மயூரி, கீர்த்தனா, ஜாதவன், தினேஸ், அமிதா, உசேனி, தர,ங்கிணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
யூலியன், யுவன், தர்மியன், கஜனா, மைத்திரி,சாமா, இசை ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான அன்னக்கிளி (சரசு), துரைசிங்கம் (இறைப்பாறிய கிராம அலுவலகர்) மற்றும் ராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை நடைபெறும்.
இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்:-
Nyborg Kirkegardskapel
Kronprinsensgade 34
5800 Nyborg
Denmark.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
