திருமதி. இளையதம்பி பரமேஸ்வரி
தோற்றம்: 04 மே 1935 - மறைவு: 14 நவம்பர் 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தின்பனை கோப்பாய் வடக்கு, கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இளையதம்பி பரமேஸ்வரி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - அழகமுத்து தம்பதியினரின் அன்புப் புத்திரியும்,
இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பரமானந்தராசா, ஆனந்தராசா (கனடா), செல்வராசா, ஜெயந்தி (கனடா), தவராசா (கனடா), தேவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, சந்திரா, கேதாம்பாள், உதயகுமார், பட்டு, ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா, வக்சலா, விஷ்ணுகாந், சுரேஸ்குமார், சதீஸ்குமார், நிவேதா, திலானி, பிரியங்கா, சஜீவன், முகுந்தன், சாருஜன், மதுரா, மதுஷன், பிரஜன், Muhundan, Sarah ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லதுஷன், ஹர்ஷாயினி, வேணுஜா, தருண், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், மகேஸ்வரி, பூபாலசிங்கம், ஈஸ்வரி, சரஸ்வதி, கணேஸ்வரி, தங்கமணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
