Mr. Emmanuvel Devanayagam
(Jaffna Commercial Bank)
Date of Birth: 25 September 1941 - Deceased: 10 August 2024
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் சந்தியாகோ சிங்கநாயகம்-லில்லி நேசம் தம்பதியினரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான டானியேல் சங்கரப்பிள்ளை-புளோரா பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி சமா தேவநாயகம் (சுண்டிக்குழி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க்கணவரும்,
டிவினியா, மேவின், டெறின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பென்ரன்(Fenton), மாலினி, எரிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரொஷின், ஏமி, ஆரணி, மிரோன், மிரண்டன், மிஷோன், எலீனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அரசநாயகம், யோகு, பத்மினி, செல்வநாயகம், கலா, வனிதா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தேவி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
ஐடா, கிலட்ஸ்ரோன், எழில், காலஞ்சென்றவர்களான மங்களம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-08-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 15-08-2024 வியாழக்கிழமை காலை 7.30-9.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 10.00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, 11.30 மணியளவில் புகழுடல் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
