திருமதி ஏரம்பமூர்த்தி செளபாக்கிய கெளரி அம்மாள்

ஏரம்பமூர்த்தி செளபாக்கிய கெளரி அம்மாள்

தோற்றம்: 22 மார்ச் 1931 - மறைவு: 11 ஆகஸ்ட் 2019

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி செளபாக்கிய கெளரி அம்மாள் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசனடி சேர்ந்தார். 
 
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 
 
காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
 
இரஞ்சன்(இணைப்பு செயலாளர்- தேசிய கொள்கைகள்,பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள், அமைச்சு), வசந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அசோகன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும், 
 
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், செளந்தரநாயக மற்றும் சிவயோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
 
ஜெயராணி(அவுஸ்திரேலியா), நவமலர்(நியூசிலாந்து), S.N ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
டர்ஷான்(அவுஸ்திரேலியா), ஹங்கா சுதன், ஹரிஹாலன்(நியூசிலாந்து), கேசிகன்(அவுஸ்திரேலியா), சரண்யா(IIT மாணவி) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-08-2019 புதன்கிழமை மு.ப 09:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: இரஞ்சன் (மகன்)
 
தொடர்புகளுக்கு
இரஞ்சன் - மகன் - Mobile : +94777342058

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)