திருமதி. எத்தல் கேற்றூட் ராஜேஷ்வரி ஜோசப்

எத்தல் கேற்றூட் ராஜேஷ்வரி ஜோசப்

தோற்றம்: 31 ஜூலை 1943 - மறைவு: 24 ஜூலை 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. எத்தல் கேற்றூட் ராஜேஷ்வரி ஜோசப் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முடியப்பா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோசப் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற றொபர்ட் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

கிலெனி, ரதினி, பிரேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரெனி கோலன்ட், உதயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கத்லீன், பிறயன், பியங்கா, ஈத்தன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,

காலஞ்சென்ற அன்ஸ்லம், வசந்தா, பேர்னடேட், ஜெசிந்தா, குயின்டஸ், கிரசென்சியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-07-2026 புதன்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-07-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இறுதி வழிபாடு மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்று, சரீரம் மாதம்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2026 00:00)