டாக்டர். G.P.J.F. ஞானசீலன்
(இளைப்பாறிய மருத்துவர் – யாழ். போதனா வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 04 அக்டோபர் 1955 - மறைவு: 21 நவம்பர் 2026
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஞானசீலன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மைக்கல் பிள்ளை ஞானப்பிரகாசம் - பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
Dr. G.A.L. நித்தியானந்தராஜா (ஐக்கிய இராச்சியம்), Dr. ஞானமனோகரி (ஐக்கிய இராச்சியம்), Dr. ஞானரஜனி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி, பாஸ்கரன், ரொஜெஸ் ஆகியோரின் மைத்துனரும்,
அர்ஜீன், பெஞ்சமின், நேத்தன், ஷனாத் மற்றும் பூஜா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 - மாலை 6.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-11-2026 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வெள்ளவத்தை சென். லோரன்ஸ் தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, மீண்டும் ஜெயரட்ண மலர்ச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 3.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
