Mrs. Ganamma Immamuvel

Ganamma Immamuvel

Date of Birth: 12 July 1942 - Deceased: 01 January 2026

யாழ். சுண்டுக்குளி புனித யுவானியர் தேவாலய பங்கைச் சேர்ந்த திருமதி. ஞானம்மா இம்மானுவேல் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - சிசிலியா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வில்பிறெட் - மாக்கிரேட் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இம்மானுவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

றெனோல்ட், றெனி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஜோன்ஸன் அவர்களின் மாமியாரும்,

ஸ்ரெவோன், சரோன், ஜெருசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பீற்றர் ஜேசுதாஸ், காலஞ்சென்றவர்களான மாக்றெட் பிலோமினா, மரியதாஸ் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜீவமலர், ஜோர்ச், அன்ரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் White House அந்தியகாலச் சேவை (இல- 180, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-01-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2026 00:00)