திரு. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் (சந்திரன்)

(ஓய்வுபெற்ற கைதடி முதியோர் இல்லப் பணிப்பாளர்)

கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் (சந்திரன்)

மறைவு: 06 மார்ச் 2025

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலகர்) - கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சத்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்சனா (பிரதேச செயலகம் - கோப்பாய்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரமணனின் (யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி) அன்பு மாமனாரும்,

விருத்ராமின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன் (தபால் அலுவலகம் - கைதடி, கோடீஸ்வரன் (தபால் அலுவலகம் - கைதடி), ரிஷிகேஸ்வரன் மற்றும் ரதீஸ்வரன் (இலண்டன்), விஜிதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

புவனலோஜினி (ஓய்வுபெற்ற தாதியர் - கைதடி முதியோர் இல்லம்), அருந்தவதேவி, இதயனி (இலண்டன்), சோபனா (இலண்டன்), தவராஜசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் பெறாமகனும்,

வசந்தமாலா (கணக்காளர் - கிளிநொச்சி பொலிஸ் நிலையம்), வசந்த சிவா, வசந்தன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

திசாந்தின் சிறிய தந்தையும்,

பிரஜித், அத்ஜித், சாரூகா (இலண்டன்), அஸ்வின், அகநிசா (இலண்டன்) ஆகியோரின் பெரியப்பாவும்,

அஜன் (ஜேர்மனி), ராம் (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, கனகசபாபதி மற்றும் அமிர்தலிங்கம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர் - நீர்வேலி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி இந்து மயான சீவியாக கடவையில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)