Mr. Kanapathippillai Shanmuganathan
Date of Birth: 24 September 1950 - Deceased: 05 April 2024
யாழ். வேலணை மேற்க்கு 8ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று வேலணை மேற்கில் இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரியின் (புவனம்) அன்புக் கணவரும்,
கோகுலதர்சன் (கோபி), கோகுலவதனன் (வதன்), டாரகா ஆகியோரின் பாசத் தந்தையும்,
அஜித்தா, சசீனா, தனசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்தி, கிருத்திகா, அஸ்வின், அனுஷா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், நல்லசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, சிவசோதியம்மா மற்றும் இரத்தினாம்பாள், குணசிங்கம், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, வல்லிபுரம், துரைராஜா, திலகவதி மற்றும் விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற அருணந்தி சிவம் ஆகியோரின மைத்துனருமாவார்.
அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 14-04-2024 மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada இல் அமைந்துள்ள Complexe Funéraire Aeterna et Crématorium இல் வைக்கப்பட்டு, 15-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
