Mrs. Gandhithilakar Thilagavathy
Deceased: 28 April 2026
யாழ். நெடுந்தீவு மேற்கு 01ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திதிலகர் திலகவதி அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனுக்கோடி - வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், நாகராசா - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காந்திதிலகர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கீதா (ஊழியர் - இலங்கை மின்சார சபை, கிளிநொச்சி), சுகிர்தா, தசாங்கன் (நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயானந்தன், துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவிக்ஷனின் அருமை பேத்தியும்,
தருமரட்ணம், குணேஸ்வரி, துரைராசா, லோகராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நல்லம்மா, காலஞ்சென்ற மார்க்கண்டு, விஜயகுமாரி, இலட்சுமி, லோகேஸ்வரி, பாலச்சந்திரன், கனகராசா, புவனேந்திரராசா, கனகரத்தினம், கமலாதேவி, சிவசுப்பிரமணிம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நண்பகல் 12.30 மணியளவில் பனங்காணி ஆற்றங்கரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
