திரு. கணேசலிங்கம் பெருமைனார்
தோற்றம்: 09 மே 1955 - மறைவு: 18 பெப்ரவரி 2025
யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் பெருமைனார் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமைனார் - சின்னத்தங்கம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சியாணி, கிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனோஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனேஷா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (தபால் அதிபர்), மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவானி, சங்கரப்பிள்ளை (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேவதாஸ், சறோஜா, அஞ்சலா, ஜலஜா, ஈஸ்வரன், குகேந்திரன், யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலநளினி, பாலஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
முரளிதரன், சுதாகரன், ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லலிதா விஜயலக்சுமி, சிறிதரன், சிவதரன், ஜெயந்தி, தமிழினி, சித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-02-2025 சனிக்கிழமை மாலை 5:30 - 9:00 மணி வரையும், 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 7:30 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
