திருமதி. கணேசன் பரமேஸ்வரி
தோற்றம்: 12 ஜூன் 1937 - மறைவு: 05 டிசம்பர் 2024
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், ஆயிலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசன் பரமேஸ்வரி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற காலம் சென்ற முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம் சென்ற கணேசன் (ஸ்ரீ கணேசா ஸ்டோர்ஸ் - பசறை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி, பத்மநாதன் (உரிமையாளர் கணேசா ஸ்டோர்ஸ் K- K-S வீதி யாழ்ப்பாணம்), யோகநாதன் (உரிமையாளர் கணேசா ஸ்டோர்ஸ் A9 வீதி கிளிநொச்சி), சற்குணேஸ்வரி, விக்னேஸ்வரன் (ஓய்வு நிலை ஆசிரியர் பசறை மகா வித்தியாலயம்), செல்வராஜா (அவுஸ்திரேலியா) ,காலம் சென்ற கற்பகராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தராஜா (ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர், வேலணை, காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர்), சிவபாக்கியம், சித்ரா, புண்ணியமூர்த்தி (பன்னாகம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஓய்வு நிலை அதிபர்), அனுஷா, மகாலட்சுமி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
