Dr. Ganesapillai Sivagurunathan
(ஓய்வுபெற்ற முகாமைத்துவ பீடாதிபதி - உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்)
Date of Birth: 07 November 1948 - Deceased: 04 April 2024
யாழ். காரைநகர் மேற்கு அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசபிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும்,
ஹரிகரன், தேஜோமயானந்தா, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியானா, மயூரி, ரிசிகேசன் ஆகியோரின் மாமனாரும்,
ஷியாமளன், அக்ஷயன், ஷாத்வீகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதாம்பாள், சாரதாதேவி மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இல-12, வைமன் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
