திருமதி. கணேசலிங்கம் அன்னரத்தினம்

கணேசலிங்கம் அன்னரத்தினம்

தோற்றம்: 18 பெப்ரவரி 1941 - மறைவு: 08 ஜனவரி 2026

யாழ். வல்வெட்டித்துறை கே.கே.எஸ் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கணேசலிங்கம் அன்னரத்தினம் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி - புண்ணியவதி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் - சிவகாமிப்பிள்ளை (இராசம்மா) தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

பிரதீப்குமார், ராதிகா, ரேணுகா, ராஜ்குமார், ரூபிகா, ரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஒளிவளர்மதி (ராதை), ஜீவகன், வீரா பாலசுப்பிரமணியம், அருளரசி, காலஞ்சென்ற கிரிதரன், காயத்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிர், கனிமொழி, மனோரதன், மதுவந்தி, மயூரதன், ஆர்த்தி, அட்சயா, ஆருண்யா, லிசாயினி, அம்பிகன், ஷரண், கனிகா, தனிகா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலவடிவேல், புஸ்பவதி, கனகராஜ் ஆகியோரின் அன்புச் சகோதராயும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், மகேஸ்வரி, திருநாவுக்கரசு, வடிவாம்பிகை மற்றும் சந்திரா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அறு நண்பகல் 12:00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2026 00:00)