திரு. கணேசன் வேலுப்பிள்ளை (அனலைசெழியன்)
(முன்னாள் இன முழக்க ஆசிரியர், ஜேபி)
தோற்றம்: 12 நவம்பர் 1935 - மறைவு: 23 ஏப்ரல் 2024
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், மணியந்தோட்டம், இந்தியா, கனடா மில்ரனில் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசன் வேலுப்பிள்ளை அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுபிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தமிழினி, எழிலினி (கனடா), கபிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பராபரன் (பரா), சசிகுமார் (சசி), லதா (பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மினுஷா, யனுஷா, நவீன், சரப்தா, எல்மன், வசிகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்.
காலஞ்சென்றவர்களான இராசம்மா, அன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, சதாசிவம், தவராசா, மற்றும் இராஜேஸ்வரி, மனோரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை, மற்றும் சிவரூபரானி, தர்மகுலநாதன், அதிரூபராணி, விமலா, உதயகுமாரி, ஜெயபாலசிங்கம், நோனா,அம்பிகாமலர். காலஞ்சென்ற மோகனதாஸ், மற்றும் தமிழரசி, எழிலரசி,சாந்தி, விமலதாஸ் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் வியாழக்கிழமை அன்று 25-04-2024 காலை 9:00 மணி முதல் முற்பகல் 10:30 வரை St.John’s Dixie Cemetery (737, Dundas St,E. Mississauga. ON-L4Y 2B5) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமைக்கிரியைகள் 10:30 மணி முதல் நண்பகல் 12:30 வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
