திருமதி. ஞானேஸ்வரி கணேசலிங்கம்

ஞானேஸ்வரி கணேசலிங்கம்

தோற்றம்: 20 டிசம்பர் 1939 - மறைவு: 02 ஜூன் 2025

யாழ். வேலைண மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு மணியக்காரன் இடத்தை புகுந்த வீடாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கணேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், இரத்தினசபாபதி, இலட்சுமிப்பிள்ளை, கனகரெத்தினம், பூமளம் (நீலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி (புஸ்பா), காலஞ்சென்ற கமலேஸ்வரி (கமலா), குகதாசன், விமலேஸ்வரி (ஆசிரியை - கொழும்பு அல் நாஸர் கல்லூரி), கோணேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஐங்கரன், ஆனந்தி, ராஜேந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசரட்ணம், இராசமலர், விஜயநாதன், அனுசியா, சர்மிளா (ஆசிரியை - கைதடி குருசாமி வித்தியாலயம்), சுகந்தி, தரணீதரன், வரதகயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷா, திவ்யா, அனுஷா, சபிதா, சஞ்சஜன், சஜீவன், நிவிதா, கேசிகன், வைகன், அக்சயன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இஷா, இனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரமேஸ்வரி, சிவப்பிரகாசம் மற்றும் வசந்தாதேவி, அம்பிகாபதி, காலஞ்சென்ற சொர்ணம்மா, சிதம்பரநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் (கோப்பாய் வீதி, கைதடி மேற்கு அன்னாரின் மகனின் இல்லத்தில்) நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)