திரு. கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் (கஜந்து)

(பிள்ளையார் லொறி உரிமையாளர்)

கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் (கஜந்து)

தோற்றம்: 27 மே 1983 - மறைவு: 11 டிசம்பர் 2024

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வங்கி வீதி, மற்றும் தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணபிள்ளை கஜந்தவநாதன் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருந்தவமலர்-கிருஸ்ணபிள்ளை  தம்பதியினரின் பாசமிகு மகனும், பார்த்தீபராஜன்-சோபனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கபிர்த்தனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஷரோன், பிரஹதி ஆகியோரின் பாசமிகு தந்தையும். 

தபோதினி அவர்களின் அன்புச் சகோதரனும்,

நிலக்‌ஷன், திலக்‌ஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் அச்சுவேலி தெற்கு முழுக்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இராச வீதி,

தோப்பு, அச்சுவேலி.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 03:11)