Mrs. Gengadevi Anandakumaraswamy
Date of Birth: 18 July 1935 - Deceased: 28 December 2024
யாழ். இளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கெங்காதேவி ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறையடி சென்றார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பு (மலேயன் Pensioner) - சரஸ்வதி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் B.A (ஓய்வுநிலை அதிபர், திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) - பூதாத்தைப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி B.A (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன் (சிவாஜி - Accountant, London) இன் பாசமிகு தாயாரும்,
ஜனனியின் (Customer Service Adviser) பாசமிகு மாமியாரும்,
பவன் (Management Accountant, London) இன் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி கிருபாகரன், Dr. கணேசலிங்கம் (R.M.O), மற்றும் குமாரலிங்கம் (J.P, Retd E.S, C.E.B) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சிவராஜா, இராஜ இராஜேஸ்வரி விசுவநாத முதலியார் (அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி சச்சிதானந்தம், ஸ்ரீபாஸ்கரன்B.A (முன்னாள் தவிசாளர் பிரதேச சபை. KKS), கலாநிதி சுசீந்திரராசா PhD (வாழ்நாள் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்), Dr. மகேந்திரன் (E.N.T Surgeon), பாலேந்திரா (Provincial Director R.D.A) மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புவனேஸ்வரி சண்முகலிங்கம் B.A (ஓய்வுநிலை ஆசிரியை), ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
