Mrs. Gengadevi Jegadevan

Gengadevi Jegadevan

Date of Birth: 30 July 1950 - Deceased: 15 August 2026

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, தோணிக்கல் - வவுனியா, உரும்பிராய்  கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கெங்காதேவி ஜெகதேவன் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மாணிக்கம் - தவமணி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சீதாமோகன் (மோகன் -இலண்டன்), வாகீசன் (பவா), வித்தியதீபன் (லதன் - கனடா), பிரகாஷினி (லதனி - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி (இசைக்கலைஞர்), மங்கையற்கரசி (கல்வித் திணைக்களம்- வடகிழக்கு மாகாணம்), மற்றும் கமலநாயகி, தேவராஜா (ஓய்வுநிலை ஆசிரியர்- கொக்குவில் இந்தக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், யோகேஸ்வரி, கதிரவேலு மற்றும் தேவராஜா ஆகியோரின் மைத்துனியும், 

இந்திரன், சுதாமதி ஆகியோரின் சிறிய தாயாரும்,

சாந்திதேவி (இலண்டன்), குமுதினி (பிரான்ஸ்), சசிதா (கனடா), கபிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சீதாராம், சிந்துராம் (இலண்டன்), வித்தகன் (பிரான்ஸ்), ஆத்மிகா, அஸ்மிகா (கனடா), ஜீவிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன் (பிரான்ஸ்), சாகித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

கிரிசாந்தன், துஷாந்தன், டுசியந்தி, இன்பசாந்தன், ஹம்ஷானந்தி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு  சித்தியும்,

டஷிகா (HNB), ஜனகரூபன் (கனடா), விதுர்சன் (Commercial Bank) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-08-2026 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் ஞானவைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இளங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2026 00:00)