திரு. கெங்காதரன் சிவபாலன்
(உரிமையாளர் - Siva Kenga Engineering கனடா)
தோற்றம்: 13 செப்டம்பர் 1977 - மறைவு: 19 ஜூலை 2025
யாழ். காரைநகர் தங்கோடை நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், மாரியம்மன் வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரன் சிவபாலன் அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கெங்காதரன் (முன்னாள் தொழில்நுட்பவியாளர்) - தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், மகேஸ்வரன் (இளைப்பாறிய அதிபர்) - இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்னுகன் (யாழ். இந்துக் கல்லூரி), ஜஸ்விகா (சென் ஜோன் பொஸ்கோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகிலராஜ் (காவல்த்துறை அதிகாரி Police), போதநிதி (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஆரணி, லஜீகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் மைத்துனரும்,
ஹிருத்திகன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இல.34-மாரியம்மன் வீதி திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
