Mr. Gerard Anthonipillai

Gerard Anthonipillai

Date of Birth: 28 March 1962 - Deceased: 13 December 2024

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள்

பாசமனங்களில் நிரந்தரமானது"

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், Markham-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெராட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை-பிரகாசியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

இம்மானுவேல்-காலஞ்சென்ற றெஜினா தம்பதியினரின் மருமகனும்,

சுபோ அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷனா, அர்ஜீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிதரன் அவர்களின் மாமனாரும்,

லயா, டியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவமலர், அன்ரன், வின்சன் மற்றும் ராணி, இமல்டா, காலஞ்சென்ற ஜோசப்பயஸ் ஆகியேராின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற டெனிஸ், ஈஸ்வரி, அன்ரன் இளங்கோ, இரட்ணசிங்கம், நிலாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 17-12-2024 காலை 8.00 - 9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre  (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் Christ the King Catholic Cemetery (7770 Steekes Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)