Mrs. Gnanambikai Ponniah
(Retired Teacher Victoria College and Bambalapitiya hindu College)
Date of Birth: 27 August 1941 - Deceased: 17 September 2024
யாழ். மூளாய் பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் சுழிபுரம் விக்றோறியா கல்லூரி மற்றும் பம்பலபிட்டி இந்துக்கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராக கடமை புரிந்து இளைப்பாறிய திருமதி. ஞானாம்பிகை பொன்னையா அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. வேலுப்பிள்ளை முருகேசு (ஓய்வுபெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி)-திருமதி.வள்ளியம்மை முருகேசு தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற சரவணை பொன்னையா (இளைப்பாறிய நீதிமன்ற பதிவாளர், பிரதான நீதிவான் நீதிமன்றம், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன் (அவுஸ்திரேலியா), தயாளினி (அவுஸ்திரேலியா), தயானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சுபோதினி, லக்சித், கார்ததியாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Tanisha, Tishona, Tresha, Trevin, Tishan ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவனேசபாக்கியம், குமாரசுவாமி (Air Force), மகேஸ்வரன் (SSP), சண்முகம் (SSP) மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
