Mrs Gnanappongothai Ratnasingam
(ஓய்வுபெற்ற ஆசிரியை வட்டு மத்திய கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி)
Date of Birth: 25 October 1942 - Deceased: 10 February 2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஞானப்பூங்கோதை இரத்தினசிங்கம் அவர்கள் 10-02-2026 செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரதமணியம் (மணியம் வாத்தியார்)- மங்கையர்க்கரசி (அரசுமிஸ்) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
திருமதி. பிரேமலதா சரத்குணசேகர (இலங்கை துறைமுக அதிகாரசபை), திருமதி. பிரியதர்சினி விக்னேசன் (கனடா), திருமதி சிவகௌரி ஸ்ரீதரன் (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானவதியார், திரு ஞானசம்பத்தர், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், திரு ஞானதேவர், திரு.தேவானந்தன், திருமதி புனிதவதியார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரஞ்சன்னா, நிமேஷ், ஹசினி, கஜானன் ஆகியோரின் அனபு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 12-02-2026 வியாழக்கிழமை காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 3:00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று 5:00 மணியளவில் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
