திருமதி. ஞானசேகரம் பேரின்பவதி

ஞானசேகரம் பேரின்பவதி

தோற்றம்: 24 மே 1960 - மறைவு: 06 அக்டோபர் 2022

யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பேரின்பவதி அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பகீரதலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற ஞானசிவம், காமாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஞானசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காயத்திரி, பிரியங்கா (ஆசிரியை, யா/வேலணை மத்திய கல்லூரி), தர்ஷி (யாழ் மருத்துவபீடம், 3ம் வருட மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார் (பொறியியலாளர் GSMB) ஆகியோரின் மாமியாரும்,

கமலாவதி(ஆசிரியை, யா/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), சரஸ்வதி (சுவிஸ்), அருந்தவராசா (சுவிஸ்), சந்தானலட்சுமி (ஆசிரியை, யா/நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்), ஆனந்தராசா (அமெரிக்கா), பாக்கியலெட்சுமி (ஆசிரியை, கிளி/அழகாபுரி வித்தியாலயம்), பாக்கியராசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிர்மலகுமார், சியாமா (சுவிஸ்), மனோரஞ்சிதன், ஜெயா (அமெரிக்கா), நிகேதரன் (ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்), தயாளினி (லண்டன்), ஞானதீபம், சிவஞானம் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,

ஐஸ்ணவிகா, காவியா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரசாந், அஹானா, லக்‌ஷிகா, லக்க்ஷனா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2022 11:34)