Mr. Gopalapillai Balakrishnar

Gopalapillai Balakrishnar

Date of Birth: 29 September 1959 - Deceased: 10 November 2026

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மெய்கண்டான் வீதி, சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கோபாலபிள்ளை பாலகிருஸ்ணர் (P.T) அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லதுரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாப் (பிரான்ஸ்), பிரபாகினி (ஜெர்மனி), மதுரகா (ஆசிரியை - யாழ். நாவற்குழி மகா வித்தியாலயம்), மதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலன் (ஜேர்மனி), தர்சிகா (பிரான்ஸ்), துவாரகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சர்விக், சர்னிகா (பிரான்ஸ்), ஆதுரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குலராசசிங்கம், அற்புதமலர், ரஞ்சிதமலர், விஜயகுமார் (ஜேர்மனி), விஜயமலர், காலஞ்சென்ற உதயகுமார், புஷ்பமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

வேதலிங்கம், சிவதாஸ், சிவயோகன், கயேந்திரன், சூரியகலா, மனோரஞ்சிதமலர், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 617 1304

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2026 00:00)