Mr. Govindasamy Kaliyapperumal
Date of Birth: 09 February 1946 - Deceased: 04 October 2025
முல்லைத்தீவு - தண்ணீரூற்று குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம், முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி கலியப்பெருமாள் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி - மாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகாந்த், ஸ்ரீகாந்த் (இலண்டன்), பாலரஜனி (இலண்டன்), நிஷாந்தினி, நிஷாமதி, ஹம்சாயினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
லதா, சாந்தினி, ஜெயானந்தம், தனரஞ்சன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, செல்வமணி, சிவானந்தம் மற்றும் திருப்பதி, சோதீஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பாலசுப்பிரமணியம், சுமதி, ஸ்ரீபதி, சுதர்சன், காலஞ்சென்றவர்களான கமலநாதன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஹரன், கிசானி, உஷா, பிருந்தா, தருண்யா, டிலுக்ஸன், தேனுஜா, கபிசன், பிரவீணா, கீர்த்தி, ஜோர்ஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அபிசிகா, கனிஷ்டா, துருவன், நிலவன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவற்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
