Mr. Govindasamypillai Gopalakrishnan
(உரிமையாளர் - நியூ கணேஷா ஸ்டோர்ஸ், கம்பளை)
Date of Birth: 28 January 1964 - Deceased: 27 July 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், இல - 11A, ராஜசிங்ஹ மாவத்தை, கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமிபிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கம்பளை கோவிந்தசாமிபிள்ளை - கமலசரஸ்வதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற வத்துகாமம் தங்கவேற்பிள்ளை - சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
கோவிநாத், யதுர்ஷன், மிதுர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
யுவித்ராவின் மாமனாரும்,
ஆதியனின் பாட்டனாரும்,
ஹட்டன் பிஜிகோட்டேஜ் சந்திரமோகன் - உமாதேவி தம்பதியினரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி (திருச்சி), பிரபாகரன் (கம்பளை முத்துமாரி ஸ்டோர்ஸ்) மற்றும் திலகவதி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற தைலான் (வத்துகாமம்), மகேஸ்வரன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
சுப்பிரமணியம் (கொழும்பு), மகேந்திரன், புஷ்பராஜ் ஆகியோரின் சகலையும்,
புஷ்பராணி, கிருஷ்ணவேணி, கௌரி, ரமணி காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் கொழுந்தனாரும்,
மோகன் (திருச்சி), பொரவி (திருச்சி) ஆகியேரின் மைத்துனரும்,
ரகுவரன், கார்த்திகா, செந்தூரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
திவாகரன் சிந்தியாவின் சின்ன மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் உடலம் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
