டாக்டர். கௌரி மனோகரி ரவிராஜன்

கௌரி மனோகரி ரவிராஜன்

தோற்றம்: 14 செப்டம்பர் 1958 - மறைவு: 30 ஏப்ரல் 2025

யாழ். ஆனைப்பந்தி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முதலியார் முத்துத்தம்பி (நல்லூர்- ஆனைப்பந்தி) அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம் - மங்கையற்கரசி (முதலியார் முத்துத்தம்பி வளவு - நல்லூர், ஆனைப்பந்தி) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான K.C துரைசிங்கி - பத்மநாயகி (வரோதயார் வளவு, கலோக் ஒழுங்கை, மானிப்பாய்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

Dr. ரவிராஜன் (பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,

Dr. மயூரா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரந்தாமன், தனஞ்செயன், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தவல்லி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லலிதாதேவி - Dr. மகாதேவா (நியூசிலாந்து), ஜெயப்பிரதா - ஜெயநாதன் (இலங்கை), சிங்கவரோதயர் - அமிர்தினி (நியூசிலாந்து), காலஞ்சென்ற சூரியகுமார் - மாலா (நியூசிலாந்து), நிஷ்கலா - ஸ்ரீரஞ்சன் (அவுஸ்திரேலியா), பத்மலோஜனா - ஜெயதேவன் (கனடா), பத்மராஜன் - கீதா (இலங்கை), சந்திரிகா - விக்கி நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:00 - 8:00 மணி வரையும் Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 1:00 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2025 04:00)