பிரம்ம ஶ்ரீ. கௌரிகணேசக் குருக்கள் கௌரிதாச சர்மா
மறைவு: 02 ஏப்ரல் 2025
பிரம்மஸ்ரீ. கௌரிகணேசக் குருக்கள் கௌரிதாச சர்மா அவர்கள் 00-04-2025 புதன்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கௌரிகணேசக் குருக்கள் - ரதிதேவி தம்பதியினரின் புதல்வனும்,
சிவரூபக் குருக்கள் - ஜெயலக்சுமி தம்பதியினரின் மருமகனும்,
ராஜீவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயவர்ஷ சர்மா, அக்ஷர சர்மா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 49 செம்மணி வீதி நாயன்மார்கட்டு குரு பீடாதிபதி வாஸஸ்தலத்தில்(குருசாமி இல்லம்) 03-04-2025ம் திகதி வியாழக்கிழமை மாலை முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 04-04-2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு இறுதி கிரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு 1:00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
மேற்படி 13ம் நாள் கிரியைகள் அனைத்தும் இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோயிலடியில் உள்ள அன்னாரின் சகோதரர் இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர் நண்பர்கள் அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
